• Dec 27 2024

பொல்லாதவன் பட நடிகை ரம்யாவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான குத்து என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான நடிகை ரம்யா.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து அர்ஜுனுடன் கிரி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

 அதன் பின்னர் தனது பெயரை திவ்யா ஸ்பந்தனா என்றும் அவர் மாற்றிக் கொண்டார். சிம்புவுடன் அவர் நடித்த குத்து படம் கூட அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் தான் தமிழில் ரம்யாவுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக இன்றளவும் உள்ளது. 


அதன் பின்னர் தூண்டில், சிங்கம் புலி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார். வாரணம் ஆயிரம் படத்தின் அனல்மேல் பனித்துளி பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகின்றது. தற்பொழுது இவர் நடிப்பை விட்டு விட்டு அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.

1982ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பெங்களூருவில் பிறந்த இவர் இன்றைய தினம் தன்னுடைய 40 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார்.பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், டாப் ஹீரோயினாக திவ்யா ஸ்பந்தனா ஒரு போதும் வலம் வரவில்லை. அந்த வகையில் இவரிடம் தற்போது 3 முதல் 4 கோடி வரை தான் அவரிடம் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement