• Dec 26 2024

ஈரம் சொட்ட சொட்ட போட்டோ ஷூட் நடத்திய பூர்ணிமா! கண்டபடி ஜொல்லுவிடும் ரசிகர்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலக நடிகையும் , யூ டியூப் பிரபலமுமான பூர்ணிமா ரவி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

இவர் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில்  1995-ஆம் ஆண்டு பிறந்த இவர், அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து, இளங்கலை பட்டத்தையும் வென்றுள்ளார். இதையடுத்து தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, இணையத்தள யூ டியூப் சேனல் ஒன்று தொடங்கி, அதில் பல விஷயங்களை பகிர்ந்து,  யூ டியூப் பிரபலமாக சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.


இதை தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் 2023ஆம் ஆண்டு ஒளிபரப்பான  பிக் பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் பங்குபற்றி, இறுதியில் 16 லட்சம் பணப்பெட்டியுடன் வெற்றிகரமாக வீடு திரும்பினார்.

அதன்பின், சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பூர்ணிமா விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்த நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற புடவையில் ஈரம் சொட்ட சொட்ட போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். 




Advertisement

Advertisement