• Dec 26 2024

விதவிதமான போட்டோஷூட் எடுத்தும் யூஸ் இல்லை.. ஜோவிகாவை ஹீரோயின் ஆக்க தயங்கும் இயக்குனர்கள்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வந்த போதிலும் அவரை ஹீரோயினாக்க இயக்குனர்கள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளராக வனிதாவின் மகள் ஜோவிகா கலந்து கொண்ட நிலையில் ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால் அவர் அடுத்தடுத்து நடந்து கொண்ட விதம், கல்விக்கு எதிராக அவர் பேசிய பேச்சு, அர்ச்சனாவை டார்கெட் செய்யும் வகையில் நடந்து கொண்டது, எப்போதுமே தூக்கத்திலேயே இருப்பது ஆகியவை காரணமாக அவர் ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை இழந்தார்.



இதனை அடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் சிறப்பு விருந்தினராக வந்தபோது கூட அவர் திருந்தவில்லை என்றும் மாயா, பூர்ணிமா புல்லிங் குரூப்பில் தான் அவர் இருந்தார் என்பதும் தெரிந்தது. இதனால் ஜோவிகா மீது நல்ல அபிப்ராயம் ரசிகர்களுக்கு ஏற்படாத நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து கிளாமர் புகைப்பட போட்டோஷூட்டுகளை எடுத்து தள்ளி வருகிறார்.

விதவிதமான அவர் போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அனுப்பி வந்த போதிலும் அவருக்கு எந்த இயக்குனரும் வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கல்விக்கு எதிராக அவர் பேசியது, டைட்டில் வின்னர் அர்ச்சனாவை அவர் அவமதித்தது ஆகியவை காரணமாக அவர் மீது மக்களுக்கு நெகட்டிவ் இமேஜ் இருப்பதாகவும், அதனால் அவரை வைத்து படம் எடுப்பது ரிஸ்க் என்றும் சில இயக்குனர்கள் கூறி வருவதாக தெரிகிறது.

இருப்பினும் தற்போது இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக இருந்து வரும் ஜோவிகா, சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement