• Dec 26 2024

35 லட்சம் வாரி வழங்கிய பிரபாஸ்! உருக்கமாக நன்றி தெரிவிக்கும் இயக்குனர்கள்

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களும் பல , கோடிகள் சம்பாதிக்கும் சினிமா துறை பிரபலங்களும் இருந்துமே கூட இன்னமும் ஒத்துழைப்பின்றி நடிகர் சங்க கட்டிடம் கட்டபடாமல் உள்ளது. இந்த நிலையிலேயே நடிகர் பிரபாஸ் இயக்குனர் சங்கத்திற்கு தனது பணத்தில் நன்கொடை வழங்கியுள்ளார்.


தமிழில் விஜய் , அஜித் போன்று தெலுங்கில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபாஸ் ஆவார். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் ராஜ மௌலி இயக்கத்தில் இவர் நடித்த பாகுபலி திரைப்படமே இவரை இந்தியா முழுதும் பிரபலமாக்கியது எனலாம்.


இவ்வாறு இருக்கும் இவர் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு (TFDA) பிரபாஸ் 35 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். தெலுங்கு திரைத்துறையை ஆதரிப்பதில் பிரபாஸின் இந்த அர்ப்பணிப்பை பல முன்னணி நடிகர்களும் பாராட்டி வருவதோடு இயக்குனர்கள் அனைவரும் உருக்கமாக நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement