• Dec 26 2024

அமிதாப்பட்சனை மண்ணை கவ்வ வைத்த விஜய்! சொல்லியடிக்கும் கில்லி வசூல் !

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் முன்னணியாக இருக்கும் நடிகர் விஜய் ஆவார். தமிழ் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் இவர் தற்போது இன்னும் இரண்டு படங்களோடு சினிமாவை விட்டு விலகப்போவதுடன் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியையும் ஆரம்பித்துள்ளார். இதனால் விஜயின் ஹிட் படங்களை ரீரிலீஸ் செய்யுங்கள் என ரசிகர்களால் கேற்கப்பட்டு வந்த நிலையிலேயே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படமான கில்லி ரிலீஸ் ஆகி உள்ளது.


தரணி இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த திரைப்படமே "கில்லி" ஆகும். விஜயின் சினிமாப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம். அன்றளவில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த ரஜினியின் "சந்துரமுகி" திரைப்படத்தின் ரெக்கோட்டை உடைத்து சாதனை படைத்திருந்தது.


இந்த நிலையிலேயே ரீரிலீஸிலும் சாதனை படைத்து வருகின்றது. இதுவரையில்  14 கோடியை  தாண்டி வசூல் செய்துகொண்டிருக்கின்றது. இது வரை ரீரிலீஸ் செய்யப்பட்ட தமிழ் படங்களில் 10 கோடியை தண்டி வசூல் செய்த முதல் திரைப்படமாகவும் இந்திய அளவில் ரீரிலீசில் 10 கோடியை தாண்டிய 2 வது படமாகவும் கில்லி  காணப்படுகின்றது. இந்திய அளவில் முதன் முதலில் 10 கோடியை தாண்டிய படம் அமிதாப்பட்சனின் ஷோலே என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement