• Dec 26 2024

Bigg Boss ஹவுஸ் பாத்ரூம்ல தாப்பால் இருக்கானு கேக்குறாங்க... சும்மா அத தூக்கிட்டு வராதீங்க... பிரதீப் ஆண்டனி அதிரடி டுவிட்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் முக்கிய போட்டியாளராக காணப்பட்டவர் தான் பிரதீப் ஆன்டனி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறி இருந்தாலும் ரசிகர்களால் விரும்பப்பட்ட போட்டியாளராக காணப்பட்டார். 


பிக் பாஸ் வீட்டில் இறுதி வரை சென்று வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய சம்பவம் இன்று மட்டும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இதற்கு காரணம் பிரதீப் மீது அடுக்கடுக்காக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தான்.எனினும் இது கமல் முடிவு மட்டுமல்ல. பிக்பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்களின் முடிவும் தான். இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார் பிரதீப் ஆன்டனி.


அந்த பதிவில் "முதல் வெளிய வர போட்டியாளர்கள் கிட்ட பிபி ஹவுஸ் பாத்ரூம்ல தாப்பல் இருக்கனு கேட்டுட்டு என்ன வந்து கலாய்ங்க, என் குடும்பத்த இழுங்க, என் மனநலம் பத்தி பேசுங்க. சும்மா ஒண்ணும் தெரியாம அனுமானங்களை தூக்கிட்டு வராதீங்க" என்று டுவிட்ட செய்துள்ளார். அத்தோடு வீடியோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்களும் பலவாறு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.  


Advertisement

Advertisement