• Dec 26 2024

பிரதீப் பிபி ரூல்ஸ்ச மீறவே இல்ல.. என்னையும் நல்லா யூஸ் பண்ணிட்டாங்க.. நம்பி ஏமாந்துட்டன்! பரபரப்பு பேட்டியளித்த அனன்யா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 7 இல் பங்கேற்ற போட்டியாளர்களுள் ஒருவர் தான் அனன்யா.

பிக் பாஸ் சீசன் 7 இல் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல, இதுவரை இல்லாத போன்று முதல் வாரத்திலையே நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறினார்.


இவ்வாறு அனன்யா ராவ் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது ஏனென்றால் பவா செல்லத்துரை தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திடீரென அனன்யா ராவ் வெளியேறினார்.

இதை தொடர்ந்து, மீண்டும் பிக் பாஸ் வழங்கிய வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் மீண்டும் உள்ளே சென்றார் அனன்யா. ஆனாலும் மக்கள் எதிர்பார்த்த அளவில் அவர் விளையாடவில்லை. இதன்  காரணமாக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மீண்டும் அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அனன்யா முதலாவதாக பேட்டியொன்றை அளித்துள்ளார். அதில் அதிர்ச்சியான சம்பவங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார். வழமையா அமைதியா பேசுற அனன்யா, இந்த முறை வெளிய வந்த பிறகு நெருப்பா வெடிச்சிட்டாங்க... அதன்படி அவர் கூறுகையில்,

நான் முதல்ல வெளிய வந்தப்போ, உள்ள விளையாடுறதுக்கு ஏற்ற போல சரியான புரிதல் இல்ல. ஆனா வெளிய வந்து திரும்பி போக முதல், எல்லா எபிசோட்டையும் பார்த்தன். எல்லாரையும் பத்தி ஸ்டடி பண்ணிட்டு தான் மீண்டும் உள்ள போனன்.


ஆனாலும், நான் நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கல.. எல்லாரும் favoritism காட்டுறாங்க.. குரூப்பா உள்ள இருக்கிறது எல்லாம் உண்மை தான். உள்ள வந்த என்கிட்ட வெளிய என்ன நடக்குது.. எப்படி எங்க பெயர் இருக்கு.. என்ன என்ன பெயர் எங்களுக்கு வெளில இருக்கு... என்றுஎல்லாம்  கேட்டு தெரிஞ்சி கொண்டாங்க.. அதுக்கு பிறகு அவங்க கேம் அப்படியே மாறிட்டு.. ஆனா நான் தான் ஏமாந்துட்டன். என்ன நல்ல யூஸ் பண்ணிட்டாங்க.

எல்லாரும் அன்பா கதைக்கிற போல தான் இருக்கும் ஆனா அது உண்மை இல்லை. நான் முதல்ல பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து சரி தான் என நினைச்சன். ஆனா இப்போ உள்ள போய் வந்த பிறகு தான் தெரிஞ்சது எனக்கும் அப்படி தான் நடந்து இருக்கு என்று.. எல்லாம் பிளான் பண்ணி தான் செய்றாங்க..நான் பைனல் வர போவன் என்று நம்பிக்கையா இருந்தன்... ஆனா எல்லாரையும் நம்பி ஏமாந்திட்டன்.

உள்ள இருக்கிற போட்டியாளர்கள் பிபி ரூல்ஸ்ச மீறி தான் நடக்கிறங்கா.. ஆனா அது எல்லாம் தட்டி கேக்க மாட்டங்க. பிரதீப் பிபி ரூல்ஸ் மீற இல்ல. ஆனா அவருக்கு இப்படி நடந்தது. இப்ப வெளிய வந்த பிறகு தான் அர்ச்சனா இதுக்கு எவ்வளவோ பரவாயில்லை என தோணுது... என பேட்டி அளித்துள்ளார் அனன்யா,

Advertisement

Advertisement