• Dec 26 2024

நைசாக ‘அமல்’ காலை சுரண்டும் ‘பிரேமலு’ ரீனு.. உண்மையாகவே பத்திக்கிச்சா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ‘பிரேமலு’ என்ற படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 3 கோடி ரூபாய் என்ற நிலையில் நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்த நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சக்சஸ் மீட்டில் இந்த படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வருகை தந்திருந்த நிலையில் இந்த படத்தில் அமல் கேரக்டரில் நடித்த சங்கீத் பிரதாப் மற்றும் ரீனு கேரக்டரில் நடித்த மமிதா பாஜூ ஆகிய இருவரும் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது.

இந்த வீடியோவை பார்த்து இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதா? என்ற கேள்வி எழுப்பிய ரசிகர்கள் உங்களை நம்பி சச்சின் என்ற ஒருவர் இருக்கிறார் அவரை ஏமாற்றி விடாதீர்கள் என்று மமிதா பாஜுவுக்கு கோரிக்கை விடுத்து கமெண்ட்ஸ் பதிவானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய வீடியோவில் மமிதா மற்றும் சங்கீத் பிரதாப் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென மமிதா பாஜு, அமல் காலை சுரண்டுகிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவை பார்த்து உண்மையாகவே இருவருக்கும் காதல் பத்திகிச்சா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மொத்தத்தில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement