• Dec 27 2024

மதுரை பொண்ணுன்னா நடிக்க வரக்கூடாதா? ‘சிங்கப்பெண்ணே’ சீரியல் நடிகை ஆவேச கேள்வி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சினிமா மற்றும் தொலைக்காட்சியில் நடிக்க சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தான் வர வேண்டுமா? ஏன் மதுரையிலிருந்து வரக்கூடாதா? என்ற கேள்வியை ஆழமாகவும் அழுத்தமாகவும் கேட்டு உள்ளார் ‘சிங்கப்பெண்ணே’ சீரியலில் நடித்து வரும் நடிகை தாரணி. 

மதுரையைச் சேர்ந்த நடிகை தாரணி படிப்பை முடித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி  தேர்வு எழுத தயார் செய்து கொண்டிருந்த நிலையில் தான் திடீரென அவரது அம்மாவிற்கு சென்னைக்கு வேலை மாற்றம் ஏற்பட்டது. இதனால் குடும்பத்துடன் சென்னையில் வந்த நிலையில் தான் அவர் மேக்கப் மாடலாக சில நாட்கள் வேலை பார்த்தார்.

அப்போது கிடைத்த பழக்கத்தின் அடிப்படையில் தான் ’செவ்வந்தி’ என்ற சன் டிவி தொலைக்காட்சி சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சின்ன கேரக்டராக இருந்தாலும் அதில் ஈடுபாட்டுடன் நடித்ததால் அடுத்தடுத்து ’சுந்தரி’ உள்பட ஒரு சில சீரியலில் நடித்த தாரணி தற்போது ‘சிங்கப்பெண்ணே’ சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ’மதுரையிலிருந்து நான் மீடியாவுக்கு வந்தேன் என்று சொன்னதும் பலர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். ஏன் சென்னை பெண்கள் மட்டும் தான் மீடியாவுக்கு வர வேண்டுமா? மதுரையிலிருந்து வரக்கூடாதா? என்ற கேள்வியை என்னுள் எழுப்பி நான் சீரியலில் கதாநாயகியாகி மதுரை  பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து காட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன் என்றும் கூடிய சீக்கிரம் கதாநாயகியாக ஒரு சீரியலில் நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

தான் மீடியாவுக்கு வந்ததை தன்னுடைய உறவினர்களே தவறாக பேசினார்கள் என்றும், ஆனால் என்னுடைய அம்மா, என் தங்கை, என்னுடைய குடும்பத்தினர் என்னை முழுமையாக நம்புகின்றனர் என்றும் அது போதும் எனது தெரிவித்துள்ளார். கண்டிப்பாக அவர் ஒரு மிகப்பெரிய இடத்தை அடைவார் என்று ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement