• Dec 26 2024

சச்சினை கண்டுக்கவே இல்லை.. அமல் உடன் மட்டும் உரசல்.. ரீனு இப்படி மாறிட்டாங்களே..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'பிரேமலு’ மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த படம் ரூ.135 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. மேலும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் மூன்று கோடி ரூபாய் என்ற நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பதும் ஒரே படத்தில் அவர் 100 கோடி சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நாயகனாக சச்சின் கேரக்டரில் நஸ்லென், நாயகி ரேணு கேரக்டரில் மமீதா பாஜூ ஆகிய இருவரும் நடித்திருந்தனர் என்பதும் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்ததை அடுத்து இந்த ஜோடி அடுத்தடுத்து தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்பினர்.

ஆனால் கடந்த சில நாட்களாக  மமீதா பாஜு, சச்சின் நண்பர் அமல் கேரக்டரில் நடித்த சங்கீத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வருகிறது என்பதும் குறிப்பாக இந்த படத்தின் வெற்றி விழாவில் இருவரும் ரகசியமாக உரசி கொண்டு பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் லண்டன் போயிருக்கும் நேரத்தில் நீங்கள் அமலுடன் ரொமான்ஸ் செய்கிறீர்களா என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் காமெடியாக  வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சச்சின் அருகில் இருக்கும் போதே, மமிதா பாஜூ  அமலுடன் உரசிக்கொண்டு நெருக்கமாக காதில் ரகசியமாக பேசும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள், ‘சச்சினை கண்டுக்கவே இல்லை, ஆனால் அமலுடன் மட்டும் உரசி உரசி பேசுகிறீர்களே’ என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

Advertisement