• Apr 04 2025

சினிமா பற்றிய சமூக விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பிருத்விராஜ்...!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் நடிகர் மற்றும் இயக்குனரான பிருத்விராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் அவர் சினிமாவைப் பார்த்து மக்கள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ள கருத்துக்களை எதிர்த்து உள்ளார். குறிப்பாக வன்முறை, பாசமின்மை, காதல் தோல்வி போன்றவை திரையுலகத்தில் காட்டப்படுவதால் தான் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது முற்றிலும் பொய்யானது என்றும் கூறியுள்ளார்.



மேலும் “சமூகத்தில் என்ன நடந்தாலும், உடனே சினிமாவைச் சுட்டிக் காட்டுவது சரியில்ல. மக்கள் மோதினார்கள், கொலை நடந்தது, வன்முறை ஏற்பட்டது என்றால், ‘அந்தப் பையன் அந்த படத்தைப் பார்த்துட்டான்… அதனால் தான் இப்படியெல்லாம் நடந்தது’ எனச் சொல்வது நியாயமல்ல. சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. அதில் நிகழ்வது அனைத்தும் இந்த உலகத்தை ஒட்டியே உருவாகிறது” எனக் கூறினார்.


சினிமா என்பது ஒரு கற்பனை உலகம் என்றாலும், அதை உருவாக்குவது மனிதர்கள் தான். அவர்கள் சமுதாயத்தில் வாழ்கின்றார்கள். அந்த சூழ்நிலை, அனுபவங்கள் மற்றும் பார்க்கும் நிகழ்வுகள் எல்லாம் ஒரு கதையை உருவாக்குகின்றன. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பிருத்விராஜ் வலியுறுத்துகிறார்.

பிருத்விராஜின் இந்த கருத்துக்கள் இன்று சினிமா மீதான பொது விமர்சனங்களுக்கு ஒரு விழிப்புணர்வான பதிலாக பார்க்கப்படுகின்றது. சினிமா என்பது சமூகத்தின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமல்ல , அது ஒரு கண்ணாடி. அந்தக் கண்ணாடியில் நாம் என்ன காண்கிறோம் என்பதைப் பொருத்துத் தான் எல்லாம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement