• Dec 27 2024

திருச்செந்தூரை அடுத்து திருப்பதி.. கோவில் கோவிலாக சுற்றும் ப்ரியா ஆனந்த்.. அப்படி என்ன வேண்டுதல்?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை பிரியா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது அவர் திருப்பதி சென்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து கோவில் கோவிலாக சுற்றும் பிரியா ஆனந்துக்கு அப்படி என்ன வேண்டுதல் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ’வாமணன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியா ஆனந்த் அதன் பிறகு ’அரிமா நம்பி’ ’இரும்பு குதிரை’ ’வை ராஜா வை’ ’திரிஷா இல்லனா நயன்தாரா’ ’முத்துராமலிங்கம்’ ’எல்கேஜி’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் ’லியோ’ படத்தில் கூட அவர் பிரியா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.



தற்போது பிரியா ஆனந்த், பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ உள்பட இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் அந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. இந்த நிலையில் நடிகை பிரியா ஆனந்துக்கு 37 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தான் அவர் திருச்செந்தூர், திருப்பதி என கோவில் கோவிலாக சென்று கொண்டிருப்பதை அடுத்து திருமணம் வேண்டுதலா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் திருச்செந்தூர் சென்று யானையுடன் அவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் நேற்று அவர் திருப்பதிக்கு சென்று உள்ளார்.

திருச்செந்தூர் திருப்பதி என வரிசையாக கோவில் கோவிலாக அவர் சுற்றி வருவதற்கு காரணம் விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்ற வேண்டுதலாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் இது ஒரு சாதாரண கோவில் விசிட் தான் என்றும் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement