தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் இளம் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ஹாய் திரைப்படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முன்னாள் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
வயதில் தன்னைவிட மூத்த பெண்ணின் மீது காதல் கொள்ளும் இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘கண்ணக்குழியா’, விஷ்ணு எடவன் எழுதிய வரிகளுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியிருந்தார். அந்தப் பாடல் வெளியாகியதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து வெளியான ‘ரசகுல்லா’ பாடலும் கவனத்தை ஈர்த்தது. ஜென் மார்டின் இசையில் உருவான அந்தப் பாடலை முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடியிருந்தார்.
இந்நிலையில், ஹாய் படத்தின் 3வது பாடலின் புரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதேவேளை, முழு பாடல் இன்று வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ‘ஹாய்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும், திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தொடர்ச்சியாக வெளியாகும் பாடல்கள் மற்றும் புரோமோக்கள் காரணமாக, ‘ஹாய்’ திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Love hit him first.
Reality hit harder 😅❤️#PachaPulla, the third single from #HiMovie, out now!
▶️ https://t.co/sqqxJvcCut…
A @jenmartinmusic Musical.
A film directed by @VishnuEdavan1.
Hi :) smiling in theatres worldwide from August 14, 2026.@Kavin_m_0431 pic.twitter.com/9dHXx6kjUI
Listen News!