• Dec 26 2024

'ரகு தாத்தா' படத்தின் ப்ரோமோஷன் "Be Like Kayal" இன்று தொடங்கியது.

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார் கீர்த்தி.தமிழின் முன்னணி நடிகர்களுக்கு திரையில் ஜோடியாய் தோன்றிய கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் சிறு சறுக்கல்களுடன் சில ஆண்டுகள் திரையுலகில் காணாமல் போனார்.

Keerthy Suresh stars as a blushing ...

தமிழில் இருந்து காணாமல் போன கீர்த்தி கம் பாக்காக தெலுங்கு மலையாள படங்களில் தனது இருப்பை நிலைநிறுத்தி முன்னணி நடிகையாக மீண்டும் தன்னை உருவமைத்துக்கொண்டார்.தற்போது இந்தி படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தியின் தமிழ் ரீ என்ரியான 'ரகு தாத்தா' வருகிற  ஆகஸ்ட் 15 இல் வெளியாகிறது.

இந்தி தெரியாது போயா” - கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா' ட்ரெய்லர் எப்படி? |  Keerthy Suresh starrer Raghuthatha movie Official Teaser - hindutamil.in

'ரகு தாத்தா' படத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு பெண்ணாக நடித்திருக்கும் கீர்த்தி போல்டானா நடிப்புடன் சிறந்த கதையையும் தெரிவு செய்திருக்கிறார்.இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ரகு தாத்தா' திரைப்படத்தில் கீர்த்தியுடன் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


படத்தின் வெளியீட்டு திகதி நெருங்க படத்திற்கான ப்ரோமோஷன் வேளைகளில் இறங்கியுள்ளது படக்குழு.'ரகு தாத்தா' படத்தின் ப்ரோமோஷனில் முக்கிய பங்கான "Be Like Kayal" நிகழ்ச்சி கோவை ஜிஆர்டி கல்லூரியில் இன்று கோலாகலமாக ஆரம்பமானது.நேருக்கு நேர் கேள்விகளை எதிர் கொண்ட இயக்குனர் மற்றும் கீர்த்தி தங்களது பதில்களை போல்ட்டாக கூறியிருந்தனர்.

Advertisement

Advertisement