• Dec 26 2024

வில்லன் பவரையும் காட்டிய யாஷ்.. பல கோடிகளில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Aathira / 12 hours ago

Advertisement

Listen News!

வரலாற்று கதை அம்சம் நிறைந்த ராமாயணத்தை மையமாகக் கொண்டு ராமாயணம் படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகியோர் நடிக்கின்றார்கள். மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.

இந்த நிலையில், ராமாயணம் படத்திற்காக நடிகர் யாஷ் வாங்கிய சம்பளம் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் யாஷுக்கு சுமார் 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தற்போது இந்த தகவல் வெளியாகி வைரலாகியுள்ளது.

பொதுவாகவே படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களுக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்படும். ஆனால் ராமாயணம்  படத்தில் வில்லனாக நடிக்கும் யாஷுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் விஜய், தெலுங்கில் அல்லு அர்ஜுன், கன்னடத்தில் யாஷ் போன்றவர்கள் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக காணப்படுகின்றார்கள். 

மேலும் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தில் முதல் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன்  மூன்றாவது பாகம் விரைவில் உருவாக உள்ளது. அத்துடன் யாஷ் நடிப்பில் டாஸ்கிங் திரைப்படமும் தயாராகி வருவதோடு அதில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க கமிட்டாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement