• Dec 25 2024

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான்! ஆரியை தொடர்ந்து வலுக்கும் ஆதரவுகள்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில், அர்ச்சனாவின் தற்போதைய ஆட்டம் சுவாரஸ்யத்தினை கிளப்பி இருக்கிறது. இதனால் அவருக்கு வாக்குகளும் குவிந்து வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களை விட, 7-ஆவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீடு, ஸ்மோல் ஹவுஸ் என இரண்டு பிரிவாக போட்டியாளர்கள் பிரிந்திருப்பதால் இரு பிரிவாக சண்டையிட்டு வருகின்றார்கள்.இறுதியாக அன்னபாரதி வெளியேறியிருந்தார்.

இவருக்கு முதல் பிரதீப் ரெட்காட் கொடுக்கப்பட்டு வௌியேற்றப்பட்டார்.இதனால் சோஷியல் மீடியாக்களில் பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மறுபுறம் இந்த வார கேப்டனான மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா மூன்று பேரையும் டார்கெட் செய்து விளையாடிய போதும், எதிர்பாராத விதமாக ஸ்மால் பாஸ் விட்டார்கள் வெற்றி பெற்று மாயாவிற்கு பல்பு கொடுத்துள்ளனர். 

அர்ச்சனா மிகவும் எமோஷனலாக அழுதாலும் தன்னுடைய பாயிண்டுகள் அனைத்தையும் முன் வைக்கிறார். எனவே அவர் இனி தைரியமாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவரைத் தொடந்து அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி ஓவியாவின் தீவிர ரசிகர்களும் அர்ச்சனாவுக்கே ஆதரவு தெரிவிக்கின்றனர். காரணம் அவர் குட்டி ஓவியா போல இருப்பதாகவும் நேர்மையாக விளையாடுவதாலும் தான்.

எனவே இம்முறை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு பின் தினேஷ் மற்றும் அர்ச்சனா முக்கிய பங்கில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement