விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என விரிவாக பார்ப்போம்.
அதில் ராதிகா விவாகரத்திற்கு விண்ணப்பித்த நிலையில் கோபியும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இதன்போது இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு சம்மதம் இருக்கின்றதா என நீதிபதி கேட்க, ராதிகா தரப்பில் இருந்த வக்கீல் தங்களுக்கு டிவோஸ் தான் வேணும் என்று சொல்லுகின்றார்.
d_i_a
இதை கேட்டு கோபி கண்கலங்குகின்றார். மேலும் இரண்டு பேருக்கும் சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை என்ற காரணத்தினால் அவர்களுக்கு குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்குகின்றது. அதன் பின்பு ராதிகா அங்கு பாக்யாவுடன் தனியாக அமர்ந்து மனம் விட்டு பேசுகின்றார்.
இதன் போது பாக்யா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுவீங்க என நான் ரொம்பவும் எதிர்பார்த்தேன் என்று சொல்ல, நம்ம கூட இருக்கணும் என்று ஆசைப்பட்ட ரிலேஷன்ஷிப் நம்மள விட்டுப் போகும்போது நான் அப்படியே பிளாங் ஆகிட்டேன் என்று ராதிகா சொல்லுகின்றார்.
இதனால் அடுத்து என்ன செய்ய போறீங்க என்று பாக்கியா கேட்க, என்ன செய்யப் போறேன் என்று சுத்தமா தெரியல என ராதிகா சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்..
Listen News!