• Dec 25 2024

வீட்டை விட்டு வெளியே போகுமாறு எச்சரித்த ராதிகா.. அடிதடியில் இறங்கிய கோபி! மனம் திறந்த ஈஸ்வரி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா, கமலா, மையூ மூவரும் வெளியே போக, கோபி எங்கே போகிறீர்கள் என கேட்கவும், ராதிகா பதில் சொல்லாமல் இப்ப சொல்லி என்ன செய்யப் போறீங்க என திட்டுகிறார்.

இதனால் கோபி மையூவிடம் கேட்க, அவர் ஹாஸ்பிடல் போவதாக சொல்லுகிறார். அதற்கு பிறகு கோபிக்கு ஞாபகம் வந்து ஓம் என என்று நானும் வருகிறேன் என்று சொல்ல, ஒன்றும் தேவையில்லை என அவரை விட்டுச் செல்கிறார்.

இதைத்தொடர்ந்து ராதிகா ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததும் என்ன நடந்தது என்று கேட்க, ஒன்னும் சொல்லாமல் அவர் உள்ளே சென்று விடுகிறார். கமலாவிடம் கேட்க, அவர் ராதிகாவ நல்லா சாப்பிட சொன்னாங்க, நிம்மதியா தூங்க சொன்னாங்க, ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க ஆனா எதுவுமே இந்த வீட்டில் செய்ய முடியாதே  என்று சொல்லி ஈஸ்வரி பற்றி மீண்டும் தப்புத்தப்பாக பேசுகிறார். 


இதனால் கோபமடைந்த கோபி அம்மாவை பற்றி பேசவில்லை என்றால் உங்களுக்கு நிம்மதி இல்லையா என கேட்டு, அவருடன் வாக்குவாத பட, அங்கு வந்த ராதிகா தனது அம்மாவுக்கு சப்போட்டாக பேசி உங்கள யாரும் இங்கு கட்டாயப்படுத்தி அட்ஜஸ்ட் பண்ண சொல்ல, உங்களால இருக்க முடியல என்றா வெளியே போங்க என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி, பாக்யா, ராமமூர்த்தி மற்றும் இனியா ஆகியோர் ஹோட்டலில் இருக்க, அங்கு ஈஸ்வரி சின்ன வயசுல இருந்த நினைவுகளை எல்லோரிடம் பகிர்ந்து கொள்கிறார். அத்துடன் தனக்கு இங்கு சாவித்திரி என்ற பிரிண்ட் இருந்ததாக சொல்ல, பாக்கியா அதைப் பற்றி யோசிக்கிறார். அத்துடன் எல்லாரும் வெளியே சென்று சாப்பிடுவதற்கு திட்டம் போடுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் கோபி தனது நண்பரை அழைத்து பார்ரிலிருந்து நன்றாக குடித்து குடித்து மட்டை ஆகின்றார். இதன் போது பக்கத்து டேபிளில் இருந்த நபர் ஒருவருடன் சண்டை போட, அவர்களும் கோபியை வெளியில் கூட்டிக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட, அங்கு செழியனும் எழிலும் வருகின்றார்கள். இதை பார்த்துவிட்டு செழியன் போக நினைக்க எழில் வேணாம் என்று  தடுக்கின்றார்.

ஆனாலும் அப்பாவை இப்படி விட முடியுமா என செழியன் போய் அங்கு உள்ளவர்களை சமாதானப்படுத்தி அப்பாவை கூட்டி வர, எழில் அவரை அங்கேயே விட்டு விட்டு வருமாறு சொல்லுகிறார் ஆனாலும் செழியன் அவரை காருக்குள் ஏற்றுகிறார். இதனால் எழில் பிடிக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement