• Dec 26 2024

மோடி பிரதமராக பதவியேற்பு விழாவில் ரஜினிக்கு அழைப்பு.. ஆனால் செல்வதில் சிக்கலா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்கும் விழா வரும் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அந்த அழைப்பை ஏற்று ரஜினி செல்வரா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி 9ஆம் தேதி டெல்லியில் பதவி ஏற்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த பதவி ஏற்பு விழாவில் பல அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் மோடி பதவியேற்கும் விழாவுக்கான அழைப்பிதழை ஏற்று ரஜினி டெல்லி செல்வாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அன்றைய தினம் ரஜினிக்கு ஒரு முக்கிய பணி இருப்பதாகவும் அதனால் அவர் பதவி ஏற்பு விழாவுக்கு செல்வது சந்தேகம் என்று கூறப்பட்டாலும் மோடிக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருப்பதால் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த், மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்பது நாளை உறுதியாகும் என்றும் நாளை பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்பவர்களின் முழு பட்டியல் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement