• Dec 26 2024

வரமுடியாது என்று கூறிவிட்ட ரஜினி.. சிம்பு, சிவகார்த்திகேயனை வளைத்த போட்ட கமல்ஹாசன்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. கமல்ஹாசனே தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் ஏற்கனவே தனது இமயமலை பயணம் திட்டமிட்டுள்ளதால் தான் தன்னால் வர முடியாது என்று கமல்ஹாசனிடம் ரஜினிகாந்த் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தான் தனது தயாரிப்பில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு ஆகிய இருவரையும் ’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசன் அழைத்ததாகவும் இருவருமே வருவதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.



கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ’அமரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகயிருக்கும் ’எஸ்டிஆர் 48’ படத்தில் சிம்பு நடிக்க இருப்பதால் இருவருமே ’இந்தியன் 2’படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசனின் சொல்லை தட்ட முடியாமல் வருகை தர சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தெலுங்கு திரையுலகில் இருந்து ராம்சரண் தேஜா இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பதும் அவர் இன்றே சென்னைக்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர மேலும் சில நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement