• Sep 16 2025

துப்பாக்கில மெயின் வில்லன் நான் கிடையாது.! உண்மையை உடைத்த வித்யூத்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

கடந்த  2012 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய்  நடித்த திரைப்படம் தான் துப்பாக்கி. இந்த படத்தில் காஜல் அகர்வால்  ஹீரோயினாக நடிக்க, வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்திருந்தார். 

இந்த படத்தில் இந்திய ராணுவ வீரன் கெட்டப்பில்  விஜய்  நடித்துள்ளதோடு  இதில் அவருடைய காமெடிகளும் ரசிகர்களை ரசிக்க வைத்திருந்தன.  கிளைமாக்ஸ் காட்சியில்  பலர் கண்கலங்கி அழுத விமர்சனங்களும் உண்டு. 

இந்த நிலையில்,  துப்பாக்கி படத்தில் நான் மெயின் வில்லன் கிடையாது என்று வித்யூத் ஜம்வால் கூறியுள்ளார்.


அதாவது  துப்பாக்கி படத்தில் முதலில் கமிட் ஆகும்போது மெயின் வில்லனாக வேறு ஒருவர்தான் இருந்தார். நான் சைட் வில்லன்களில் ஒருவராகத் தான் இருந்தேன்.  ஷூட்டிங் தொடங்கும் மெயின் வில்லன் கடைசி நேரத்தில் விலகிவிட்டார்.

நான் அன்று மாலை தான் முதன் முதலில் முருகதாஸ் சந்தித்தேன் என்னை பார்த்ததும் நீங்கதான் மெயின் வில்லன் என்றார் என்னால் நம்பவே முடியவில்லை நீங்கள் தான் பெட்டர் என்றும் முருகதாஸ் கூறினார் நான் அவ்வளவு லக்கி எனக் கூறியுள்ளார்

Advertisement

Advertisement