• Dec 26 2024

'இந்தியன் 3’ படம்ன்னு மட்டும் சொல்லிடாதீங்க.. ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவிப்பை கலாய்த்த நெட்டிசன்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக இருப்பதாக சமூக வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தயவுசெய்து ’இந்தியன் 3’ படம் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படம் மிக மோசமான விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ தோல்வியை மறைப்பதற்காக சூட்டோடு சூடாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிட உள்ளது. அனேகமாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் அப்டேட் ஆக இருக்கலாம் என்று சிலரும், இன்னும் ஒரு சிலர் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் கமல் நடிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் மேலும் சிலர் சிம்பு நடிக்க இருக்கும் 48வது படம் குறித்த அறிவிப்பை தான் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட இருப்பதாகவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் எந்த அறிவிப்பாக இருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து ’இந்தியன் 3’ படத்தின் அப்டேட்டை மட்டும் வெளியிட வேண்டாம் என்று நெட்டிசன்கள் இந்த அறிவிப்பு கலாய்த்து வருகின்றனர்.

மொத்தத்தில் நாளை மறுநாள் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின்  அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement