• Dec 26 2024

திருமணத்திற்கு பின் 65 கிலோவை சுமக்கும் ரகுல் ப்ரீத் சிங் .. வைரல் வீடியோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் 65 கிலோ எடையை தூக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டுயுவாஎன்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர்தடையறத் தாக்க’ ’என்னமோ ஏதோஉள்பட  சில தமிழ் படங்களில் மட்டும் நடித்தார்.

அதன் பிறகு அவர் தெலுங்கில் ரகுல்   ப்ரீத் சிங் பிஸியான நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் கார்த்தி நடித்ததீரன் அதிகாரம் ஒன்றுஎன்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி  ஆனார். அதன் பின்னர் கார்த்தி நடித்ததேவ்சூர்யா நடித்தஎன்ஜிகேஉள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின்அயலான்படத்தில் தாரா என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார்.

தற்போது அவர் கமல்ஹாசனின்இந்தியன் 2’ உட்பட சில படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஜாக்கி பாக்லானி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கோவாவில் நடந்த இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் ரகுல்   ப்ரீத் சிங் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் 23 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 65 கிலோ எடை தூக்கும் வீடியோவையும், ரிஸ்க் எடுத்து வொர்க் அவுட் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement