• Dec 25 2024

சிவகார்த்திகேயனைப் பற்றிய ரம்யா கிருஷ்ணனின் உருக்கமான பகிர்வு இணையத்தில் வைரல்!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி, கடின உழைப்பாலும், முயற்சியாலும் வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

இவரின் சமீபத்திய படமான "அமரன்" ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், வசூலில் சாதனை அமைத்துள்ளது. உலக அளவில் இப்படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம், "அமரன்" திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது.

அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், சிவகார்த்திகேயனைப் பற்றிய ஒரு பேட்டியில் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் அதில்,
"ஜோடி நிகழ்ச்சியின் போது, சிவகார்த்திகேயனின் திறமையை கவனித்ததால் அவருக்கு அதிகமான டாஸ்க்குகளை கொடுத்தேன். அவர் ஹீரோவாக மாறவில்லை என்றால் நான் எனது பெயரை மாற்றிக் கொள்வேன் என்று சொன்னேன். இன்று அவர் தனது திறமையால் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement