பிரபல பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கத்தில் திகில், திரில்லர் நிறைந்த படமாக அகத்தியா திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அகத்தியா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உடலை மெய்சிலிர்க்க வைக்கும் அதிரடியான கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகி உள்ளது.
d_i_a
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜீவாவுடன் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் பான் இந்திய படமாக அகத்தியா படம் உருவாகி உள்ளதோடு, இந்த படம் எதிர்வரும் ஜனவரி 31ம் திகதி ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.
இந்த நிலையில், அகத்தியா படக்குழுவினர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதனை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். இதன் போது ராஷி கன்னா முட்டி உடைத்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி உள்ளது.
Listen News!