• Dec 26 2024

’புஷ்பா 2’ படத்தில் ஐட்டம் சாங்.. தோழிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த ராஷ்மிகா.. சம்பளம் இத்தனை கோடியா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்த நிலையில் அந்த ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடுவதற்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. ’புஷ்பா’ படத்தின் வெற்றிக்கு அந்த ஒரு பாடல் மிகப்பெரிய காரணமாக அமைந்தது என்பதால் ’புஷ்பா 2’ படத்திலும் ஒரு ஐட்டம் சாங் வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பாடலில் நடனமாட முதலில் சமந்தாவை தான் அணுகியதாகவும் ஆனால் அவர் முடியாது என்று கூறிவிட்டதை எடுத்து ஸ்ரீலீலா உட்பட சில நடிகைகளிடம் அணுகியதாக தெரிகிறது. ஆனால் பிரபல நடிகைகள் யாரும் ஒரு பாடலுக்கு நடனமாட விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தனது தோழிக்கு அந்த வாய்ப்பை வாங்கி கொடுத்துள்ளதாக தெரிகிறது.



நடிகை ராஷ்மிகா மந்தனா ’அனிமல்’ திரைப்படத்தில் நடித்த போது அதே படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் தான் நடிகை திம்ரிதான். இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு விட்டதாகவும் ராஷ்மிகாவுக்கு சிறந்த தோழியாக திம்ரிதான் மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் ’புஷ்பா 2’ திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட திம்ரிதானுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தது மட்டுமின்றி மூன்று கோடி ரூபாய் சம்பளமும் தயாரிப்பாளரிடம் பேசி ராஷ்மிகா மந்தனா தனது தோழிக்கு வாங்கி கொடுத்துள்ளதாக தெரிகிறது.

முதல் பாகத்தில் இருந்த ஐட்டம் பாடலை விட இந்த பாடல் செம ஹிட் ஆகும் என்றும் கிளாமரும் தூக்கலாக இருக்கும் என்றும் கூறப்படுவதை அடுத்து ரசிகர்கள் இந்த பாடலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement