• Dec 26 2024

முதல் வாரமே நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கிய ரவீந்தர்? உச்சகட்ட பீதியில் 6 போட்டியாளர்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்றைய தினம் அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் புதிய கோஸ்டாக விஜய் சேதுபதி கலந்து கொண்டு உள்ளதோடு 18 போட்டியாளர்களும் அதிரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட முதலாவது டாஸ்கே போட்டியாளர்களே ஆட்டம் காண வைத்தது. அதன்படி 24 மணி நேரத்திற்குள் ஒருவர் வெளியேறுவார் என்று அறிவிக்கப்பட்டது. இது போட்டியாளர்களுக்கு உச்சகட்ட பரபரப்பை கொடுத்தது.

இதைத் தொடர்ந்து அதிகமாக நாமினேஷன் செய்யப்பட்ட சச்சனா இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு நாளிலேயே சச்சனாவை வெளியேற்றியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் இதற்கு பின்பு வேறு ஏதும் பிளான் உள்ளதா இல்லையா என்று யாருக்கும் தெரியவில்லை.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் எட்டின் முதலாவது வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் ஆறு பேரின் பெயர்கள் சிக்கி உள்ளன.

அதன்படி இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சௌந்தர்யா, அருண்,  ரவிந்தர், ரஞ்சித், முத்து மற்றும் ஜாக்லின் ஆகியோர் காணப்படுகின்றனர். எனவே இந்த வாரம் இதிலிருந்து யார் வெளியேறப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement