• Dec 26 2024

பார்ப்போரின் நெஞ்சை கதிகலங்க வைத்த ரேவதியின் லேட்டஸ் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் என்பதாம் ஆண்டு கால கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ரேவதி. இவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் துணிச்சலோடு நடித்து பெயர் எடுக்கக் கூடியவர். இன்றும் தனது கேரியரை விட்டுக் கொடுக்காமல் அவ்வப்போது  படங்களில் தலைகாட்டி வருகின்றார்.

ஆரம்பத்தில் இவர் நடித்த மண்வாசனை படத்தை தொடர்ந்து கை கொடுக்கும் கை, வைதேகி காத்திருந்தால், உன்னை நான் சந்தித்தேன், புதுமைப்பெண், மௌன ராகங்கள் போன்ற பல படங்களை நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.

அதிலும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படத்தில் இவருடைய குறும்புத் தனமான நடிப்பால் பலரும் இவருக்கு தீவிர ரசிகர்கள் ஆனார்கள். அதன் பின்பு கார்த்திக், ரேவதி, மோகன் காமினேசனின் பல திரைப்படங்கள் வெளியாகி ஹிட் கொடுத்தன.


அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகை ரேவதி தற்போது, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்காக வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், நடிகை ரேவதியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மொத்தமாக மாறி வயதான தோற்றத்தில் காணப்படுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் இது அந்த காலத்து ரேவதியா? என வருத்தம் தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement