தெலுங்கு திரை உலகில் பிரபல ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்பு ரவி தேஜாவின் தமாகா படத்தில் வரும் பாடல் ஒன்றில் கவர்ச்சி நடனம் ஆடி பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் அதிகமாக நடித்துள்ள இவர், பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.
இறுதியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கொள்ளையடித்தார்.
தற்போது தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25 வது படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவதோடு மார்டன் உடையில் ஹார்ட் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
இந்த நிலையில், தற்போது ஸ்ரீ லீலாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் செம்ம வைப்போடு டான்ஸ் ஆடிக்கொண்டு சென்றதோடு மட்டுமில்லாமல் அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவருடன் ஆட்டம் போட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
SreeLeela 💃
pic.twitter.com/Zma8ymCUkP
Listen News!