• Dec 27 2024

மீனாவுக்கு கிடைத்த பெரிய ஆடர்.. ஜெயிலுக்கு செல்ல ரெடியான ரோகிணி? உடைந்த ரிலேஷன்ஷிப்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஏன் என்கிட்ட காரை விற்ற விஷயத்தை மறைச்சீங்க சிட்டியாலத் தானே காரை வித்தீங்க அப்படி என்று மீனா கேட்க, நீ எதுக்கு அங்க போன அவனே ஒரு ரவுடி. முதல்ல உங்க தம்பியை திருத்தி வை அப்படி என்று முத்து சொல்கிறார்.

மறுபக்கம் முத்து ஆட்டோவில் போக அவரின் நண்பர் ஒருவரை பார்க்கிறார். அது கட்சி ஆபீஸ் ஆக இருக்கிறது. அப்போது குறித்த நண்பர் முத்துவையும் கட்சியின் ஆபிசுக்கு உள்ளே அழைத்து செல்ல, அங்கு தலைவராய் இருந்தவரிடம் முத்துவை நண்பர் என்று அறிமுகம் செய்கிறார். 

மேலும் அவர்கள் 250 ஜோடிக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ய, அதில் ஒரு ஜோடி மட்டும் கல்யாணத்துக்கு குறையுது அப்படி என்று முத்துவின் நண்பர் தலைவரிடம் சொல்ல, முத்துவை கல்யாணம் செய்யுமாறு அவர் சொல்கிறார்.

அதற்கு முத்து நான் ஏற்கனவே கல்யாணம் கட்டியதாக சொல்கிறார். இதை தொடர்ந்து கல்யாணத்துக்கு தேவையான மாலை கட்டும் நபர் ஓடிப் போய்விட்டதாக சொல்ல, அந்த தலைவர் முத்துவின் நண்பருக்கு பேசுகிறார்.

இதை அடுத்து முத்துவின் நண்பர் மீனா நல்லா மாலை கட்டுவாங்க தானே அப்படி என்று சொல்லி, முத்துவுக்கு 20 ஆயிரம் அட்வான்ஸ் பணமும் கொடுத்து 500 மாலைகளுக்கு ஆர்டர் பண்ணுகிறார்.


இதை அடுத்து வீட்டுக்கு வந்த முத்து சந்தோஷத்தில் அண்ணாமலையிடம் மீனாவை கூப்பிடுமாறு சொல்லி, 500 மாலைக்கு ஓடர் வந்திருக்கிறது, அட்வான்ஸ் பணமும் வாங்கியாச்சு என்று மீனாவிடம் சொல்லுமாறு அண்ணாமலையிடம் சொல்கிறார்.

அதற்கு மீனா என்னட்ட கேக்காம எப்படி ஆர்டர் பண்ணுவீங்க?இன்னும் இரண்டு நாள்ல எப்படி கொடுக்கிறது அப்படி என்று சொல்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் தகவல்கள் பரிமாறும் நபராக அண்ணாமலை இருக்கிறார். மேலும், நாளைக்கு பூ வாங்க கடைக்கு போகணும், மாலை கட்ட ஆட்கள் பிடிக்கணும் என்று பிளான் பண்ணுகிறார் மீனா.

மறுபக்கம் ரோகினி, மனோஜ் இருவரும் வீதியால் நடந்து கொண்டு சென்றிருக்க, மனோஜ் கனடா விஷயம் பற்றியும், இங்க பிசினஸ் திறக்கனும் என்றா உங்க அப்பா கிட்ட காசு கேளு அப்படி என்றும் சொல்ல,  அப்படி எல்லாம் கேட்க முடியாது. ஏற்கனவே அவரிடம் வீட்டு பத்திரத்துக்கு காசு வாங்கியாச்சு. அதனால நீ இங்க ஒரு வேலைய ஒழுங்கா பாரு என சொல்கிறார் ரோகிணி.

இவ்வாறு இருவரும் ரோட்டில் பேசிக்கொண்டு போகும்போது பேங்க் காரர்கள் இருவர் ரோகினியை பார்த்து அவர் பின்னால் சென்று அவர்களை நிறுத்தி, உன்ன தான் இவ்வளவு நாளா  தேடிக்கொண்டு இருக்கம். மூன்று வருடத்திற்கு முதல் கடன் வாங்கிட்டு நல்லா ஏமாத்திட்டா என்று ரோகிணிக்கு திட்டுகிறார்கள். மேலும், உன்ட வீட்டு அட்ரஸ்க்கு போனா நீ அங்க இல்ல அப்படி என்று ரோகிணிக்கு சரமாரியாக திட்டுகிறார்.

மேலும் ரோகிணி உன்னையும் ஏமாற்றிட்டாவா என மனோஜிடம்  கேட்க, அவர் இல்லை நான் அவருடைய புருஷன் என சொல்கிறார். இறுதியில் இன்னும் ஒரு மாசத்துல பணம் வரல என்றா இருவரையும் போலீசுக்கு கொடுப்பேன் அப்படி என்று மிரட்டி அவர்களை போட்டோ எடுத்து செல்கிறார்கள்.

அதன் பின் ஏன் இந்த விஷயத்தை என்கிட்ட மறைச்ச அப்படி என்று மனோஜ் கேட்க, அதை நான் மறந்துட்டேன். அது வித்தியா அம்மாவுக்கு தான் எடுத்துக் கொடுத்தது அப்படி என்று சமாளிக்கிறார் ரோகிணி.

ஆனாலும் ரிலேஷன்ஷிப்ல உண்மையா இருக்கணும்னு என்றா எல்லாம் சொல்லியிருக்கனும் என மனோஜ் சொல்ல, நான் ஒன்றும் உன்ன போல 27 லட்சத்தை எடுத்துட்டு ஓடல என வாய் தவறி ரோகிணி சொல்கிறார். இதை அடுத்து கோவப்பட்டு மனோஜ் செல்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement