• Dec 27 2024

மீனாவை தரதரவென இழுத்து வீசிய விஜயா.. பயங்கரமான பிளேன் போட்ட ரோகிணி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி மஞ்ச கயித்தோட இருக்கா அவளுக்கு செயின் வாங்கி கொடுக்கணும் என்று சொல்ல, அதை மனோஜ் வாங்கி போடுவார் என்று அண்ணாமலை சொல்லுகிறார். மேலும் விஜயா இதைப்பற்றி பேசிக் கொண்டு இருக்க, மீனாவும் மஞ்ச கயிரோடு இருந்ததா. அப்போ உனக்கு கவுரவம் போகலையா? மூன்று மருமகளையும் ஒரு மாதிரி பாரு என விஜயாவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்.

இதை தொடர்ந்து ரோகிணியிடம்,  இப்படியேவா வெளியே போகப் போறாமா?  யாராச்சும் மஞ்ச கயிறு கட்டி இருக்கிற பார்த்தா என்ன சொல்லுவாங்க? நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆகிறது என்று சொல்லுகிறார். மேலும் கீழ வீட்டு வாடகை தரணும் அவங்க கிட்ட காசு வாங்கி செயின் எடுப்பம் என்று சொல்ல, அது எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார் ரோகிணி. பிறகு மீனாவை பற்றி விஜயா தரக்குறைவாக பேசிக் கொண்டு இருக்க ஸ்ருதி  கோபப்படுகிறார். மேலும் நீங்க மீனாவ பத்தி தான் சொன்னீங்க. ரோகிணி நகைய அடகு வச்சதுக்கு மீனா என்ன பண்ணுவா? எங்கம்மா பணம் வேணாம் என்று தானே சொன்னாங்க. இவங்க வச்சுக்க வேண்டியது தானே என்று பதிலடி கொடுக்கிறார்.

இதை அடுத்து ரோகினி வித்யாவை சந்தித்து நடந்ததை எல்லாம் சொல்லி, இப்போதைக்கு என்ன காப்பாற்ற போறது இந்த மஞ்ச கயிறு தான். இதை பார்க்கும் போது மனோஜ்க்கும் மாமியாருக்கும் ஒரு கில்ட் வந்துட்டே இருக்கும் இத வச்சு கொஞ்ச நாள் ஓட்டிடுவேன் என சொல்லுகிறார்.


இதையடுத்து மீனா காய்ச்சலில் இருக்க, முத்து அவரை உள்ளே ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு மெடிக்கல் ஷாப்புக்கு மருந்து வாங்க போகிறார். அந்த நேரத்தில் மனோஜ் ரோகிணியும் வந்து டயர்டா இருக்கு என்று மனோஜ் உள்ளே படுக்க செல்கிறார். அதன்போது மீனா தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து விஜயாவிடம்  விஷயத்தை சொல்லி கூட்டி வருகிறார் .

அந்த நேரத்தில் அண்ணாமலையிடமும் இதனை சொல்ல, மீனா உடம்புக்கு முடியல என்று தான் படுத்து இருக்கா. அவ தூங்கட்டும்  என்று சொல்லுகிறார். ஆனால் அதையும் கேட்காமல் விஜயா  அவரை எழுப்பி, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் ரூம்ம பிடிச்சுட்டு இருக்கியா? என திட்டுகிறார். மேலும் நீ எல்லாம் ஜெனரல் வாட்டில் தான் படுக்க வேண்டும் என்று மீனாவை தரதரவென வெளியே எடுத்து வர அங்கு முத்து நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பின்பு எங்களுக்கு ரெஸ்ட் எடுக்க ரூம் வேண்டும் என்று மனோஜ், ரோகிணி சொல்ல, ஹால்ல படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதானே முத்து சொல்லுகிறார். இவர்களின் பிரச்சினையில் ஸ்ருதி, ரூம்க்கு இப்படி சண்டை போடுறீங்களே என்று சொல்ல, உங்களுக்கு வரும் போது தெரியும் என ரோகிணி சொல்கிறார்.

அதற்கு ஸ்ருதி, நான் இப்படி எல்லாம் சண்டை போடா மாட்டேன். அம்மா வீட்டை போய் இருந்துட்டு வருவேன் என சொல்ல, விஜயா ஷாக் ஆகிறார். மனோஜும் அப்போ நாங்களும் ஹோட்டல்ல தங்குவம் என்று சொல்கிறார். இதனை விஜயா அண்ணாமலையிடம்சொல்ல, அவர் இன்டைக்கு மனோஜ், முத்துவ அவர் கூட படுத்துக் கொள்ளுமாறும், விஜயா, ரோகிணி, மீனாவை ஒரு ரூமில் படுத்துக் கொள்ளுமாறும் சொல்கிறார். இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement