சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் தனக்கு கிடைத்த பிராப்பிட்டில் விஜயாவுக்கு காப்பு வாங்கி கொடுக்கின்றார். இதை பார்த்து விஜயா மிகவும் சந்தோஷப்படுகிறார். அதன்பின் பீச் ஹவுஸ் ஒன்றை வாங்கப் போவதாகவும் சொல்லுகின்றார்கள். இதனால் மிகுந்த சந்தோஷத்தில் விஜயா மனோஜையும் ரோகிணியையும் கட்டிப்பிடித்து மகிழ்கின்றார்.
இதை தொடர்ந்து மீனா மொட்டை மாடியில் தனியாக நின்று யோசித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த முத்து என்ன என்று கேட்கின்றார். அதற்கு ரோகிணி தனியாக வீடு பார்த்து போவதற்கு நிற்கின்றார். அது போலவே ஸ்ருதியின் அம்மாவும் ஸ்ருதியை தனியாக பிரித்தெடுக்க நிற்கிறார். இப்படியே போனால் குடும்பம் பிரிந்து விடும் என்று கவலைப்படுகிறார்.
d_i_a
இன்னொரு பக்கம் ரோகினி தனது அம்மா வீட்டுக்குச் சென்று தாங்கள் வீடு வாங்க போவதை சொல்லுகின்றார். மூன்று கோடிக்கு வீடு வாங்க போவதாக சொல்ல, அவ்வளவு காசுக்கு என்ன செய்வாய் என்று கேட்க, அதை மாதம் மாதம் கட்டி முடிக்கலாம் என்று ரோகிணி சொல்லுகின்றார்.
அதற்கு, எங்களுடைய வருமானத்தின் படி தான் குடும்பத்தை நடத்த வேண்டும். அது தான் நிம்மதியா இருக்கும் என்று அவருடைய அம்மா சொல்ல, அப்படி என்றால் உனக்கு நான் வீடு வாங்குவது பிடிக்கவில்லையா என்று அவருக்கு பேசுகின்றார். அதன் பின்பு கிரிசை ஸ்கூலுக்கு கூட்டிச் செல்கின்றார்.
இதை தொடர்ந்து அண்ணாமலையும் முதல் நாள் வேலைக்கு செல்வதற்காக கிளம்புகின்றார். இதன் போது மீனா அவருக்கு மதிய சாப்பாடு கட்டி கொடுக்க, தனது அம்மா ஞாபகம் வந்துவிட்டதாக ரொம்பவும் எமோஷனல் ஆகிறார் அண்ணாமலை. இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!