கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீசானது புஷ்பா 2 திரைப்படம். தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பார்க்கப்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் கிட்டத்தட்ட அதன் வெற்றியை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது. இதற்கு இடையில் அல்லு அர்ஜுன் வேற எந்த படத்திலும் நடிக்கவில்லை . இந்த ஒரு படத்திற்காகவே அயராது உழைத்துள்ளார். இவருடன் இணைந்து நேஷனல் கிரஸ் ரஷ்மிக்கா மந்தனா, பஹத் பசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் நடித்த ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. புஷ்பா பாகம் 1ல் அவரின் நடிப்பு ,நடனம் என்பனவை படத்திற்கு பலம் சேர்த்தது. இந்நிலையில் புஷ்பா-2லும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை இழுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே ராஷ்மிக்கா புஷ்பா BTS புகைப்படங்களை பகிர்ந்த நிலையில் அது வைரலானது. தற்போது ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து " ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தை நீங்கள் ரசித்து ஏற்றதற்கு நன்றி, புஷ்பராஜின் துணையாக அமைந்த இந்த ஸ்ரீ வள்ளி எனது வாழ்க்கையின் முக்கியமான கதாபாத்திரமாக மாறி விட்டது. இதனை வடிவமைத்த இயக்குனருக்கு நன்றி" என்றும் பகிர்ந்துள்ளார்.
Listen News!