விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.
அதில் ரோகினி தனது பையனை கூட்டிக்கொண்டு முதல் நாள் பாடசாலைக்கு அழைத்து செல்லுகின்றார். அங்கே உள்ளே செல்லும்போது அண்ணாமலையும் முத்துவும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார்.
இதன் போது முத்துவை பார்த்த கிரிஷ், முத்து அங்கிள் என்று சொல்லி சந்தோஷப்பட , கிரிஸின் வாயை மூடிக்கொண்டு அங்கிருந்த ஆட்டோ ஒன்றுக்குள் ஏறி மறைந்து இருக்கின்றார் ரோகினி. அண்ணாமலையும் முத்துவும் போன பிறகு பாடசாலையின் வாட்ச்மேனிடம் அவர் எப்போதும் வேலைக்கு வருவாரா? என்று அண்ணாமலையை பற்றி விசாரிக்கின்றார்.
d_i_a
அவர் வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமை மட்டும் தான் வேலைக்கு வருவதாக சொல்கின்றார். இதைத்தொடர்ந்து வீட்டுக்கு சென்ற ரோகிணி இந்த விஷயத்தை பற்றி தனது அம்மாவிடம் சொல்லுகின்றார். இதனால் அவர் எல்லாம் உனது விதித்தான். நீ நேரா உண்மையை சொல்லி அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடு என்று சொல்லுகின்றார்.
ஆனாலும் நான் உண்மையை எல்லாம் சொன்னா அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவார்கள் என்று சொல்லி புலம்புகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. எனவே கிரிசை சேர்த்திருக்கும் அதே பாடசாலைக்கு அண்ணாமலையும் வேலைக்கு செல்கின்றார்.
முத்துவும் அதே இடத்திற்கு சென்று உள்ளார். எனவே இனிவரும் நாட்களில் க்ரிஷ் இருக்கும் வீட்டையும் முத்து கண்டுபிடித்து விடுவாரா? ரோகிணியின் கபட நாடகம் இனி சரி வெளியே வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!