• Dec 25 2024

கோபியின் மாற்றத்தால் பாக்கியா எடுத்த முடிவு.? ராதிகாவுக்கு தலையில் விழுந்த பேரிடி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது பாக்கியா தான் அவரை ஓடிப்போய் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்க்கின்றார். அதன் பின்பு அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் கோபியுடன் இணைந்து ராதிகாவை பார்க்க விடாமல் பண்ணியதோடு மீண்டும் அவரை பாக்யா வீட்டிற்கு அழைத்து வந்து விடுகின்றார்கள்.

பாக்கியா ஈஸ்வரி உடன் சண்டை போட்டு அவர் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று சொன்ன போதிலும் ஈஸ்வரி ரொம்பவும் எமோஷனலாக பேசி கோபியை வீட்டுக்கு அழைத்து வருகின்றார். இதனால் ராதிகாவும் பாக்யாவைத்தான் தப்பாக நினைக்கின்றார்.


இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான பாக்கியலட்சுமி ப்ரோமோவில்,  புதிதாக கல்யாண ஆர்டர் வருகின்றது. அதில்  லெபனீஸ் டிஸ் கேக்குறாங்க என்ன பண்ணுற என்று தெரியலை என செழியன், ஜெனி உடன் பேசிக்கொண்டு உள்ளார் பாக்கியா.

அந்த நேரத்திற்கு அங்கு வந்த கோபி அப்படி என்றால் லெபனீஸ் டிஸ் செய்யத் தெரிந்த ஒரு செப்பை வேளைக்கு எடுத்தால் ப்ராப்ளம் சரியாகிடும் என பாக்யாவுக்கு ஐடியா கொடுத்து செல்கின்றார். 

அதன்பின் பாக்கியா பார்க்கில் இருக்கும்போது அங்கு வந்த கோபி, உன்ன பார்க்க ஆச்சரியமாகவும் பிரம்மிப்பாகவும் இருக்குது. இப்போ எல்லாம் நீ எவ்வளவு ஸ்மார்ட்னு தெரிஞ்சுக்கிட்டேன். இது தெரிஞ்சிருந்தா நான் முன்னாடி உன்னை விட்டு போயிருக்க மாட்டேன் என்று சொல்கின்றார்.


இதைக் கேட்ட பாக்கியா, ஏன் உங்களை காப்பாற்றினேன் என்று எண்ண வைக்க வேண்டாம் என திட்டி விட்டு செல்கின்றார். இதைத்தொடர்ந்து ராதிகா கோபியை பார்க்க வந்த போதும் தான் எவ்வளவோ பாக்கியாவை கஷ்டப்படுத்தி இருப்பதாக பாக்யாவை பற்றி பெருமையாக பேசுகின்றார். இது ராதிகாவுக்கு அதிர்ச்சியாக காணப்படுகிறது.

எனவே தற்போது கோபி பாக்கியா பக்கம் சாய்ந்து வரும் நிலையில் இனி வரும் கதைக்களம் எவ்வாறு நகரப் போகின்றது? பாக்கியா மனம் மாறுவாரா? இல்லை ராதிகா கோபியை மீண்டும் டிவோஸ் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement