• Dec 26 2024

ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான்.. சுக்குநூறாக்கிய விஜயா! இறுதியில் பாக்கியா செய்த காரியம்?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

அதன்படி பாக்கியலட்சுமி எபிசோட்டில் இன்றைய தினம், ராமமூர்த்திக்கு பாக்கியா இறுதிச் சடங்கை செய்ய,கோபி எதுவும் செய்ய முடியாமல் கவலை பட்டுக் கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் சாயங்காலம்ஆக முதல் சடங்கு எல்லாம் செய்து ஐயாவை தூக்க வேண்டும் என ஊராக்கள் சொல்லுகின்றார்கள்.

அதன்படியே இறுதியாக எல்லாரும் அழுது ஒப்பாரி வைத்து ராமமூர்த்தியை வழியனுப்பி வைக்கின்றார்கள். ராமமூர்த்திக்கு வாய்கரிசி போடுவது முதல் பானை உடைப்பது வரை அனைத்து இறுதிச்சடங்கையும் பாக்கியா செய்கின்றார்.



இறுதியாக ராமமூர்த்தியை அப்பா என அழைத்து கத்தி கதறி அழுகின்றார். அதன் பின்பு ராமமூர்த்திக்கு கொள்ளி வைத்துவிட்டு வருகின்றார்கள். கோபியின் தன்னை மன்னித்து விடுமாறு ராமமூர்த்தியின் சமாதிக்கு முன்னால் இருந்து அழுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவும்  மீனாவும் வந்து அண்ணாமலையிடம் நடந்தவற்றை சொல்ல, இவற்றையெல்லாம் ரோகிணி கதவுக்கு பின்னால் நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். விஜயா வந்ததும் முத்துவும் மீனாவும் கதையை நிப்பாட்டி விடுகிறார்கள்.

அதன் பின்பு முத்து க்ரிஷை எப்படியாவது தத்து எடுப்பேன் நீ மட்டும் சம்மதம் சொன்னால் போதும் என்று சொல்லுகின்றார். இதைக்காட்டு ரோகினி நேராக விஜயாவிடம் சென்று அவர்கள் வெளியில் என்ன கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ? க்ரிஷை தத்து எடுக்கப் போகின்றார்கள் என்று சொல்ல, அதுவும் நல்லது தானே இதை காரணமாக வைத்து அவர்களை வெளியே அனுப்பி விடுவேன் என்று வேறு ஒரு பிளான் போடுகின்றார் விஜயா.


இதனால் தான் போட்ட பிளான் எடுபடவில்லை என்றதும் வித்தியாவுடன் சிட்டிக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு ஸ்கூலில் க்ரிஷ்க்கு அப்ளிகேஷன் வாங்குகின்றார். அப்படியே வீடும் பார்த்துவிட்டு தனது அம்மாவிடம் போன் பண்ணி சொல்லுகின்றார் ரோகினி. 

அதன் பின்பு மீனா மாலை கட்டிக்கொண்டு இருக்க , தனக்கு 11 மணிக்கு பார்வதி வீட்டுக்கு சாப்பாடு கட்டி கொண்டு வருமாறு கட்டளை போடுகின்றார் விஜயா. ஆனாலும் மீனா தான் அவசர அவசரமாக மாலை கட்டி கொடுக்க வேண்டும் என்று சொல்லவும் நீ சாப்பாட்டை தந்து விட்டு மிச்ச வேலையை பாரு என்று சொல்லுகின்றார். அங்கு வந்த முத்து அப்படி என்றால் மீனாவுக்கு சம்பளம் கொடுங்கள் என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement