• Dec 27 2024

ஆர்.ஆர்.ஆர். பட பிரபலத்தின் மனைவி.. அனுஷ்காவின் யோகா சீடர்.. பரிதாப முடிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்.’ படம் உள்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கேகே செந்தில்குமார் அவர்களின் மனைவி ரூஹி என்பவர் திடீரென காலமாகிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 


இந்திய திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் கே.கே.செந்தில்குமார். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பதிவாளராக இருக்கும் நிலையில் இவரது ஒளிப்பதிவில் உருவான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. 


‘பாகுபலி’ ’பாகுபலி 2 ’மற்றும் ஆர்.ஆர்.ஆர். படங்களில் இவரது பணி சிறப்பாக இருந்தது என்பதும் இதனை அடுத்து இவருக்கு சில விருதுகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் கேகே செந்தில்குமார் என் மனைவி ரூஹி என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. 


கடந்த 2009 ஆம் ஆண்டு செந்தில்குமார் ரூஹியை திருமணம் நடந்த நிலையில், ரூஹி ஒரு யோகா டீச்சர் என்றும் இவர் நடிகை அனுஷ்காவின் யோகா பள்ளியில் பணிபுரிந்து வந்ததாகவும் அதன் பின்னர் தனியாக யோகா வகுப்புகள் நடத்தியதாகவும் கூறப்படுகிறது 


இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் மனைவி ரூஹி மறைவுக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது இறுதி சடங்கு என்று ஐதராபாத்தில் 9 மணிக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement