• Dec 27 2024

விவாகரத்தான சைந்தவிக்கு அடைக்கலம் கொடுத்த இன்னொரு இசையமைப்பாளர்.. வைரல் புகைப்படங்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கடந்த சில நாட்களுக்கு முன் தனது மனைவி சைந்தவியை பிரிய இருப்பதாக அறிவித்தது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இன்னொரு இசையமைப்பாளர் சைந்தவிக்கு ஆதரவு கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்து நண்பர்களாக இருந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் குழந்தை பிறந்த நிலையில் திடீரென ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விவாகரத்துக்கு பின்னர் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டும் இசையமைத்துக் கொண்டும் இருக்கும் நிலையில் சைந்தவி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் பாடலை பாடியுள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் பாடல் பாடியது பிரபல இசையமைப்பாளர் டி இமான் இசையில் என்பது குறிப்பிடப்பட்டது.

டி இமான் தான் இசையமைக்கும் ‘பேபி அண்ட் பேபி’ என்ற  படத்தில் ஒரு பாடலை பாட சைந்தவிக்கு வாய்ப்பு கொடுத்து ஆதரவு கொடுத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ரியோ ராஜ், யோகிபாபு சத்யராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்தில் தான் சைந்தவி ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சைந்தவியின் குரலை மீண்டும் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement