• Dec 26 2024

சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்.. சரத்குமார் பட இயக்குநர் திடீர் மறைவு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சரத்குமார் நடித்த இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் சூர்ய பிரகாஷ் என்பவர் சற்றுமுன் திடீரென காலமான நிலையில் அவரது மறைவுக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகில் ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்த ’மாணிக்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சூர்ய பிரகாஷ். அதன் பிறகு சரத்குமார் நடித்த ’மாயி’ ’திவான்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் என்பதும் இதில் ’மாயி’ சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இயக்குநர் சூர்யபிரகாஷ் ஜீவன் நடித்த ’அதிபர்’ என்ற படத்தை இயக்கிய நிலையில் ’வருசநாடு' என்ற படத்தை இயக்கியதாகவும் அந்த படம் சில காரணங்களால் வெளியாகவில்லை என்றும் கூறப்பட்டது



இந்த நிலையில் இன்று திடீரென இயக்குநர் சூர்ய பிரகாஷ் காலமானார் என்ற செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Advertisement

Advertisement