• Dec 26 2024

பக்கத்து வீட்டு பையனுக்கு பட்டுக்குட்டி செய்த உதவி.. ’ஸ்டாலினை போய் பாருங்க’ என அறிவுரை..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

செஃப் வெங்கடேஷ் பட் தனது சமூக வலைதள பக்கத்தில் பக்கத்து வீட்டு பையனின் திறமையை பாராட்டி அந்த பையனுக்கு வாழ்த்து கூறிய வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் பட்டுக்குட்டிக்கு எவ்வளவு இளகிய மனது’ என்று ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் செஃப் வெங்கடேஷ் பட் . தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’டாப் குக்கு டூ குக்கு’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பக்கத்து வீட்டில் உள்ள ராஜேஷ் என்ற பையன் தன்னை அச்சு அசலாக வரைந்து அசத்தியதாகவும் அவர் மாற்றுத்திறனாளி என்பதால் நம்மால் செய்ய முடியும் வேலைகளை செய்ய முடியாவிட்டாலும் நம்மால் செய்ய முடியாத வேலையை அவர் செய்துள்ளார் என்றும் அந்த அளவுக்கு அவரிடம் திறமை இருக்கிறது’ என்றும் கூறி வாழ்த்தினார்.

மேலும் வரைவதற்கு தேவையான பொருட்களை அவர் பரிசாக கொடுத்த நிலையில் ’இதே போன்று இன்னும் நிறைய வரையுங்கள், நிறைய பாராட்டுக்கள் பெறுங்கள், வாழ்க்கையில் நன்றாக முன்னேறுங்கள்’ என்று வாழ்த்து கூறினார். அப்போது அந்த சிறுவன் ராஜேஷின் அம்மா மீனா ’ஸ்டாலின் சாரையும் என் மகன் வரைந்துள்ளான்’ என கூற ‘அப்படியா ரொம்ப நல்ல விஷயம், நீங்கள் ஸ்டாலின் அவர்களை போய் பாருங்கள், கண்டிப்பாக அவர் வாழ்த்து தெரிவிப்பார்’ என்று தெரிவித்தார்.

மேலும் அந்த பையனின் படிப்புக்கும் வெங்கடேஷ் பட் உதவி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த வீடியோ செஃப் வெங்கடேஷ் பட் அவர்களின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement