• Dec 25 2024

சாரி பிக்பாஸ் மன்னிச்சிருங்க! ஒட்டுமொத்தமாக காலில் விழுந்த போட்டியாளர்கள்!

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8ன் இன்றைய நாள் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில்  போட்டியாளர் முத்துகுமரன் பிக்போஸிடம் "சாரி பிக்பாஸ் தெரியாம பண்ணிட்டேன்" என்று மன்னிப்பு கேட்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது என்ன நடந்தது என பார்ப்போம்.


பிக்பாஸ் வழங்கிய கேப்டன் கோல் மால் டாஸ்க்கில் முத்து விட்டு கொடுத்து விளையாடியதால் பிக்பாஸ் இனி பிரீபாஸ் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி விட்டார்கள். இந்நிலையில் முத்து "பிக்பாஸ் வேணும்னு பண்ணல பிக்பாஸ் சாரி மன்னிச்சிருங்க" என்று சொல்கிறார். 


அதற்கு மற்ற போட்டியாளர்கள் "நீ பண்ணுன தப்புனால மட்டும் இல்லை எல்லாரும் அதேதான் பண்ணி இருக்கோம்" என்று சொல்கிறார்கள். பின்னர் முத்துவை சமாதானம் பண்ணிவிட்டு எல்லோரும் "பிக்பாஸ் எங்களை மன்னித்து விடுங்க எங்க தப்பு  எங்களுக்கு புரியுது, இந்த ஒரு தடவை மன்னிச்சிருங்க பாஸ்" என்று அணைவரும் ஒன்றாக நின்று மன்னிப்பு கேட்கிறார்கள். இனி பிக்பாஸ் மன்னிப்பாரா? இல்லையா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

Advertisement

Advertisement