• Dec 26 2024

6 நாளாக உயிருக்கு போராடும் சைத்தான் நாயகி! திரும்பியும் பார்க்காத பிரபலங்கள்! சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் குடும்பத்தார்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான சைத்தான், கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை தான் அருந்ததி நாயர். மலையாளத்திலும் சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர்,  தனது சகோதரருடன் பைக்கில் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தொன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து சுமார் ஆறு  நாட்களுக்கு முன் நடந்துள்ளது.

இது பற்றி அருந்ததியின் சகோதரி கூறுகளில், இந்த விபத்தில் சிக்கிய அருந்ததி, பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், கடந்த ஆறு நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயர் தற்போது, சிகிச்சைக்கு மேலதிக பணம் இல்லாத காரணத்தால் அவரது குடும்பம் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், அவரது சகோதரர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், அருந்ததியின் சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தினால் அவரது குடும்பம் தவித்து வருவதாகவும், அவருக்கு உதவ பிரபலங்கள் யாரும் முன் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், இதை அறிந்து பலரும் அவருக்கு உதவ முன் வரலாம் எனவும், தொடர்ந்தும் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement