• Dec 26 2024

குடும்பத்துக்காக சத்யா எடுத்த முடிவு? முத்துவுக்கு எதிர்பாராத ஷாக்! ரோகிணியை குத்தகைக்கு எடுத்த PA..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், மீனாவின் அம்மா மீனாவுக்கு போன் பண்ணி சத்யா திரும்பவும் சிட்டி கிட்ட வேலைக்கு போக போறேன் என்று நிக்கிறான், நீ கொஞ்சம் வீடு வரைக்கும் வந்திட்டு போ என்று சொல்கிறார்.

மறுபக்கம் விஜயா, வீட்டுல என்னவோ நடக்குது ஆனா என்ன என்று தெரியல என அண்ணாமலையிடம் புலம்பிக் கொண்டு இருக்க, ஸ்ருதி, ரவியிடம் என்ன பிரச்சினை என்று கேட்க, ஒன்றும் இல்லை என சொல்கிறார்.

அதற்கு அண்ணாமலை அவங்க பிரச்சினைல நீ தலையிடாத என சொல்ல, அப்போ எப்படி வீட்டுல குழந்தை சத்தம் கேக்கும் என புலம்புகிறார்.

இதையடுத்து வீட்டுக்கு போன மீனா, சத்யாவிடம் நீ சிட்டியுடன் மீண்டும் வேலை செய்ய வேண்டாம், அவனால தான் இவ்வளவு  பிரச்சினையும் என்று சொல்ல, அதை ஒன்றும் கேட்காமல் எனக்கு நிறைய கனவு இருக்கு, சீதா அக்காக்கு கல்யாணம் பண்ணனும், காசு இல்லடி யாரும் மதிக்க மாட்டாங்க, அப்புறம் உன்ன போல தான் அடிமையா வச்சிருப்பாங்க என்று எல்லாம் சொல்லி மீண்டும் சிட்டியிடம் வேளைக்கு போகிறார்.


இன்னொரு பக்கம் ரோகினி பாலரில் இருக்கும் போது அங்கு வந்த பிஏ தனக்கு ஐம்பதாயிரம் பணம் தருமாறு கேட்கிறார். அதற்கு காசு இல்லை என சொல்லவும், அப்ப நான் உங்க வீட்டுக்கு போவேன் என மிரட்டுகிறார். அது மட்டும் இன்றி நீ அந்த வீட்ல இருக்க மட்டும் எனக்கு நீ காசு தரணும், என்ட குடும்பத்தை பிரிச்சது நீ தான்,  நான் உன்னை குத்தகை எடுத்திருக்கேன், நான் கேட்கும் போது எல்லாம் காசு தரணும் அப்படி என்று சொல்கிறார்.

அந்த இடத்துக்கு வந்த பாலர் ஓனர், ஜென்ஸ் எல்லாம் ஏன் உள்ள விட்டா? என ரோகினிக்கு பேச, இரண்டு நாள்ல உனக்கு பணம் தாரேன் என்று சொல்லி அவரை அனுப்புகிறார் ரோகிணி.

இன்னொரு  பக்கம் கார் செட்டில் முத்துவும்  பிரண்ட்ஸும்  சவாரி பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார். அந்த இடத்திற்கு சிட்டி உடன் சத்யா வருகிறார்.

அங்கு வந்த சிட்டியிடம், உனக்கு வாங்கினது போதாதா?  ஏன் இங்க வந்தாய் என செல்வம் கேட்க, சத்யா தான் முத்து கூட பேசணும் என்று வந்தான் என சிட்டி சொல்கிறார்.

இதை தொடர்ந்து சத்யா ஒன்றும் பேசாமல் கையில் இருந்த  பணக்கட்டை எடுத்து முத்துவுக்கு பக்கத்தில் கொண்டு போய் வைக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement