• Dec 25 2024

சவுண்டுக்கு சேலை கட்டி உட்காரத் தெரியலையா?சேதுபதியின் கேள்விக்கு சத்யாவின் பதில் என்ன?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்போஸ் சீசன் 8 ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது இவ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைய ப்ரோமோவில் புதிய சுவாரஸ்யமும், பரபரப்பான தருணங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இப் ப்ரோமோவில், போட்டியாளர்கள் இடையே கருத்து மோதல்கள் தீவிரமடைவது போல காட்டப்படுகிறது. குறிப்பாக, வீட்டு உறுப்பினர்கள் தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒருவருக்கொருவர் மோதுகின்றனர். அணியினரிடையே தகாத வார்த்தைகள் மற்றும் வேகமாக நடக்கும் விவாதங்கள், இந்த சீசனில் புது திருப்பங்களையும், பரபரப்பையும் உருவாக்குகின்றன.


இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி சத்யாவினை பார்த்து சவுந்தர்யாவிடம் மாற்றவேண்டிய விடயங்கள் என்ன என கேட்டதற்கு சத்யா அவர் உடுத்தியிருந்த ஆடை தனக்கு பார்ப்பதற்கு ரொம்ப ஒரு மாதிரி இருந்ததாக கூற பெண்களை பார்த்து விஜய் சேதுபதி உங்களுக்கும் அப்பிடி தோணிச்சா என கேட்க அவர்கள் இல்லை என கூறியுள்ளனர்.இதை கேட்ட சத்யா தலை குனிந்துள்ளார்.

Advertisement

Advertisement