• Dec 26 2024

செத்தான் மனோஜ்-uh.. பறிபோனது சர்வர் வேலை..! மீனாவின் அப்பா நினைவு நாளையும் அசிங்கப்படுத்திய விஜயா!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், முத்துவை தனியா அழைத்துப் பேசிய அண்ணாமலை, என்ன நடந்தது என கேட்க, அவரால் சொல்ல முடியாமல் தவிக்கிறார். மேலும் இனி அப்படி செய்ய மாட்டேன் என்று அண்ணாமலையிடம் சொல்லி செல்ல, வெளியில் மீனா நிற்கிறார். 

அண்ணாமலை மீனாவிடம், அவன் மனசில் எதையோ போட்டு குழப்பிட்டு இருக்கான். கூடிய சீக்கிரம் என்ன என்று சொல்லுவான் என சொல்ல, அவர் மனசில ஒன்றும் இல்லை. கோவத்துல தான் என் தம்பியை அடிச்சாரு என சொல்லி செல்கிறார்.

இன்னொரு பக்கம், மனோஜ் நேரம் சென்று வீட்டுக்கு வர, ரோகிணி ஏன் லேட் என கேட்க, ஒரு மாதிரி சமாளிக்கிறார். அத்துடன் அவர் சேட் மீது மசாலா வாசம் வரவும், புது சென்ட் வாங்கி தருவதாக சொல்லுகிறார்.


மறுபக்கம் முத்து கார் இல்லாத காரணத்தினால், வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓடுகிறார்.

ஹோட்டலில் கஸ்டமர் ஒருவரின் மேல், மனோஜ் சாம்பாரை தவறுதலாக ஊற்றி விட அது பிரச்சினை ஆகிறது. அதனால் ஹோட்டல் ஓனர் அவரை வேலையில் இருந்து தூக்குகிறார். வேலை போன கவலை இல்லாமல், ஹோட்டல் ஓனரை திட்டிவிட்டு செல்கிறார் மனோஜ்.

இதை தொடர்ந்து, மீனாவின் அம்மாவும் தங்கையும், மீனா வீட்டுக்கு வந்து மீனா அப்பாவின் ஒரு வருட நினைவு நாள் வருது, நீங்க எல்லாரும் வீட்டுக்கு வரணும் என சொல்ல, அண்ணாமலை கொஞ்சம் எமோஷனல் ஆகிறார்.

ஆனால் விஜயா, அவரே உடம்பு சரி இல்லாமல் இருக்கிறார், நீங்க உங்க வீட்ட பண்ண வேண்டியது தானே, உங்க புருஷனே அல்பாயசத்துல போய் சேர்ந்துட்டாரு என சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

Advertisement

Advertisement