• Dec 26 2024

திருமணத்தில் அணிந்த ஆடையை விருதுவழங்கல் விழாவிற்கு அணிந்து வந்த ஆலியாபட்... அதுகுறித்து ஆச்சரியப்பட்டு பேசிய ஷாருக்கான் மகள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஆலியா பட் தனது திருமண நாளில் அணிந்த புடவையை மீண்டும் தேசிய விருது வழங்கும் விழாவில்  அணிந்ததை பார்த்து ஆச்சரியப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகள் பின்வருமாறு சமூகவலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


பிரபல முன்னணி நடிகையான ஆலியாபட் சினிமா துறையில் தனக்கென தனி இடம் பிடித்து கொடிகட்டி பறப்பவர். இந்நிலையில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர். அதற்காக பல விருதுகளும் பெற்றுள்ளார்.


இதனையடுத்து சமீபத்தில் நடந்த விருதுவழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஆலியாபட் தனது திருமணத்தின் போது அணிந்திருந்த ஆடையை அந்த விழாவிற்கும் அணிந்து வந்துஇருக்கிறார். இதனை பார்த்த பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானாகான் சமூக சமூகவலைதளபக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


புதிய உடைகளை தயாரிக்கும்போது எவ்வளவு கழிவுகள் வெளியாகிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஆலியாவின் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில் இருந்தது. சமூகத்தில் அவ்வளவு பெரிய இடத்தில் உள்ள ஆலியாவே ஏற்கனவே அணிந்த உடையை உடுத்துகிறார் என்றால், நாமும் பார்ட்டி அல்லது ஏதேனும் |நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ஆலியா பட்டை பின்பற்றி, ஏற்கனவே |அணிந்த உடையை அணியலாம் என்ற உந்துதலை கொடுக்கிறது என நடிகை சுஹானா கான் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement