• Dec 25 2024

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டாரா ஜோயா? இந்த வாரம் ஏன் வரவில்லை?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சனி, ஞாயிறு அன்று ஒளிபரப்பான எபிசோடில் ஷாலின் ஜோயா கலந்து கொள்ளவில்லை என்பதை எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். மேலும் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலக போவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது.

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷாலின் ஜோயா இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருக்கு ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதால் அவர் தனது ஃபாலோயர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.



இந்த நிலையில் கடந்த வார எபிசோடில் ஷாலின் ஜோயா கலந்து கொள்ளாததை அடுத்து ரசிகர்கள் அவரது புகைப்படத்தில் கமெண்ட்களாக ’உங்களை ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம்’ என்று பதிவு செய்ய அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது உடல்நிலை சரியில்லாமல்  இருந்ததால் தான் கடந்த வார எபிசோடில் கலந்து கொள்ளவில்லை என்றும் தற்போது உடல்நிலை தேறி வருகிறது என்றும் இனி அடுத்தடுத்த எபிசோடுகளில் தவறாமல் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஷாலின் ஜோயா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் ’உங்கள் உடல்நலனை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் அவரது போஸ்டுக்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. குறிப்பாக மலையாளம் கலந்த செல்லமாக பேசும் உங்கள் தமிழ் ரசிக்க வைக்கிறது என்றும் உங்களுக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கிறோம் என்றும் சில கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

Advertisement

Advertisement