நடிகை ஜோதிகா மற்றும் அவரது கணவர் நடிகர் சூர்யா தற்போது மும்பையில் குடிபெயர்ந்து பல படங்கள் மற்றும் வெப் சீரியல்களில் நடித்து வருகிறார்கள். ஜோதிகா தற்போது 'டப்பா கார்டெல்' என்ற வெப் சீரியலில் நடித்து வருகின்றார். இந்த வெப் சீரியலின் ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றார்.
இதை விட சூர்யா தனது தொழிலிலும் சமூக சேவையிலும் புதிய பாதைகளைக் கண்டு முன்னேறி வருகிறார். 'கங்குவா' திரைப்படத்தின் தோல்வியின் பின்னரும் அவர் நம்பிக்கையுடன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் அவர் அகரம் அறக்கட்டளை நடத்தி வருகிறார். சமீபத்தில் அந்த அறக்கட்டளையின் புதிய அலுவலகத்தை அவர் தனது சொந்த பணத்தில் கட்டி திறப்பு விழாவை கொண்டாடியுள்ளார்.
இவ்வாறு ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் மிகவும் பிஸியான சினிமா பிரபலங்களாக இருந்து வருகின்றனர். இருப்பினும் சமீபகாலமாக ஜோதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் ஜோதிகாவிடம் " சூர்யா உங்களுக்கு வழங்கிய பெரிய gift என்ன " எனும் கேள்விக்கு ஜோதிகா அவரே எனக்கு gift என அழகாக பதிலளித்துள்ளார்.
Listen News!