• Dec 26 2024

டாப் ஹீரோக்களுக்கு பேரிடியாய் விழுந்த ஷாக்கிங் நியூஸ்! ரஜினி, கமல், அஜித்துக்கு சம்பள முடக்கமா? LYCA அதிரடி முடிவு

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', கமல் நடிக்கும் 'இந்தியன் 2', மற்றும் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.

இந்தப் படங்கள் மட்டுமின்றி நடிகர் விஜயின் மகன் இயக்க உள்ள படத்தையும் தொடர்ச்சியாக தயாரிக்க உள்ளது.

இந்த நிறுவனம் குறைந்த மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தது. தற்போது இந்த படங்களை தயாரிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த படங்களை தயாரிப்பதன் மூலம் குறைந்த அளவிலேயே லாபம் வருவதாகவும், நஷ்டம் வந்தால் முழுமையாக வருவதாகவும் லைக்கா நிறுவனம் கூறியுள்ளது.

இதன் காரணமாக 30 முதல் 40 கோடிக்கு அதிகமான பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரிப்பது என்று முடிவு செய்துள்ளது.


இந்த நிலையில், வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி ஆகிய படங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டை தாண்டியதால் முன்னணி நடிகர்களின் சம்பளத்தை முடக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

தற்போது லைக்கா நிறுவனத்தில் இந்த அதிரடி முடிவை நினைத்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தாலும், முன்னணி நடிகர்களின் நிலை என்னவாகும் என்பதே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement