• Jun 13 2025

தி இந்தியன் ஹவுஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து.! வெளியான அதிர்ச்சி தகவல்...!

Roshika / 23 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிகில் இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்போது " தி இந்தியன் ஹவுஸ் " திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இவர் ஹேப்பி டேஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்குசினிமாவில் அறிமுகமாகி உள்ளார். மேலும் இந்த படத்தில்  நான்கு ஹீரோக்களில்  ஒருவராக நடித்திருந்தார்.  மேலும் பல திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தார்.மேலும்  அவரது சினிமாத்துறைக்கு இந்த திரைப்படம்  திருப்புமுனையாக மாறியது. மேலும் இவர் பல  திரைப்படங்களில் நடித்துள்ளார்.அதாவது யுவதா, சுவாமி ரா ரா , கார்த்திகேயா,சூர்யா vs சூர்யா, எக்கடிக்கி போதவு சின்னவாடா , கேசவா, அர்ஜுன் சுரவரம் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற வெற்றிப் படங்களில் நாயகனாக நடித்தார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தார். 


இந்த நிலையில் இவர் நடிக்கும் "தி இந்தியன் ஹவுஸ்" திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடல் போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது தண்ணீர் டேங் உடைந்து ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதனைப்பார்த்த ரசிகர்கள் "பெரும் ஆபத்துக்கள் ஏதும்  நடைபெறாமல் இருக்க வேண்டும்" என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 





Advertisement

Advertisement